‘முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் தலைவரின் வித்தியாசமான வடிவமைப்பு வீடு!’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by Aajtak
‘முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் தலைவரின் வித்தியாசமான வடிவமைப்பு வீடு!’ என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சமீப காலமாக பல்வேறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வித்தியாசமான தோற்றம் கொண்ட வீட்டின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரண்டு மாடி வீடு ஒரு சாலையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையைத் தடுக்கவில்லை.
இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிரிப்பு இமோஜி செய்து வருகின்றனர். முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த திரிணாமுல் தலைவர் ஒருவர், சாலையை ஆக்கிரமிப்பு செய்யாமல் இப்படி ஒரு வீட்டைக் கட்டியுள்ளதாக படத்தைப் பகிர்ந்துள்ளவர்கள் கூறுகின்றனர். அந்த புகைப்படத்தில், “முர்ஷிதாபாத்தில் ஒரு டினு தலைவரின் வீடு. ஆனால், சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படம், “மிகவும் நேர்மையானவர். போக்குவரத்துக்கு நல்ல ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.” என பகிரப்பட்டுள்ளது.
இந்த வைரலான படம் முர்ஷிதாபாத்திலோ அல்லது மேற்கு வங்கத்திலோ இல்லை என்பது அஜாதக் உண்மைச் சோதனையில் கண்டறியப்பட்டது. ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தது இந்த வித்தியாசமான வடிவமைப்பு வீடு என கண்டறியப்பட்டுள்ளது..
உண்மை சரிபார்ப்பு:
ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் வைரலான படத்தைத் தேடிய போது, இந்தியா டிவியின் செய்தியில் அதே படம் காணப்பட்டது. நவம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட்ட செய்தி, வீட்டின் படம் சமீபத்தில் வைரலாகிவிட்டதாகவும், ஆனால் வீட்டின் படம் எங்கிருந்து வந்தது என்பதை விரிவாகக் கூறவில்லை.
இந்த விஷயத்தில் ஹிந்தியில் சில முக்கிய வார்த்தைகளைத் தேடும்போது, அதே படத்தை பஞ்சாப் கேஷ்ரி ஹரியானாவில் இருந்து ஒரு செய்தியில் காணப்பட்டது. நவ. 21-ம் தேதி வெளியான இந்தச் செய்தியில், ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தின் புன்ஹானா சப்-டிவிஷனில் உள்ள பிரேமகேரா கிராமத்தின் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த வித்தியாசமான வடிவமைப்பு வீடு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக எழுதப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக வீடு கட்டப்பட்டுள்ளதாக பலர் புகார் கூறி வருகின்றனர்.
இந்த வீட்டின் உரிமையாளர், அருகில் உள்ள மசூதியின் தொழிலாளியான முகமது இன்சாப் ஆவார். சாலை மற்றும் வீடு இரண்டும் தனது சொந்த நிலத்தில் கட்டப்பட்டது என்பதால், விதிமீறல் கட்டுமானம் குறித்த கேள்வி எழவில்லை. அவரது கோரிக்கையை வாதிட்ட அவர், கட்டுமானம் சட்டவிரோதமாக இருந்திருந்தால், அவர் மீது புகார் அளிக்கப்படும் என்று கூறினார். ஆனால் முழு நிலமும் அவருக்கு சொந்தமானது என்பதால் அது நடக்கவில்லை.
இது குறித்து நியூஸ் 18 கடந்த நவம்பர் 20-ம் தேதி செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியின்படி, மசூதி பணியாளர் தனது விவசாய நிலத்தின் ஓரத்தில் கட்டப்பட்டதாகவும், தனது சொந்த நிலத்தில் சாலையும் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உள்ளூர் எஸ்டிஎம் சஞ்சய் தட்டர்வாலிடம் பேசும்படி கேட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் இவ்விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
கேள்விக்குரிய கட்டுமானம் குறித்து ETV இந்தியாவினால் மசூதி ஊழியருடன் ஒரு நேர்காணலும் நடத்தப்பட்டது. மசூதியைச் சுற்றியுள்ள முழு நிலமும் தனது பெயரில் பதிவு செய்யப்பட்டதால் சட்டவிரோத கட்டுமானம் என்ற கேள்விக்கு இடமில்லை என்றார்.
முடிவு:
ஹரியானாவில் ஒரு கேள்விக்குரிய கட்டுமானத்தின் படம் சமூக ஊடகங்களில் தவறான கூற்றுகளுடன் பரப்பப்பட்டது. இது மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சித் தலைவரின் பெயருடன் பொருத்தமற்றது என உறுதி செய்யப்பட்டது.
Note : This story was originally published by ‘Aajtak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.