Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கொரோனாவின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

10:00 AM Jan 05, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘PTI

Advertisement

கொரோனா தொற்றின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும் என சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

கோவிட்-19 இன் நான்காவது அலை 2025 ஜனவரியில் மீண்டும் வரும் என்று ஒரு செய்தி கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. வைரலான வீடியோ கிளிப்பில், Republic Bharat செய்தி தொகுப்பாளர், “ஜனவரி என்பது கொடியதாக இருக்கலாம். அடுத்த 40 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என தெரிவிக்கிறார்.

PTI Fact Check Desk இன் விசாரணையில் வைரலான பதிவு போலியானது என நிரூபிக்கப்பட்டது. இந்த வைரலான வீடியோ டிசம்பர் 2022ல் எடுக்கப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பயனர்கள் இரண்டு ஆண்டுகள் பழமையான வீடியோவை சமீபத்தியது எனக் கூறி பகிர்ந்து வருகின்றனர்.

உரிமைகோரல்:

டிசம்பர் 17 அன்று, ஒரு பயனர் சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, "புத்தாண்டு 2025, கவனமாக இருங்கள், ஜனவரியில் கொரோனா பாதிப்பு மீண்டும் வருகிறது, சீனாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார். பதிவின் இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே பார்க்கவும்.

இதனிடையே, மற்றொரு பயனர் டிசம்பர் 20, 2024 அன்று இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோவைப் பகிர்ந்து, ‘கொரோனா 2025 இல் மீண்டும் வரப்போகிறது’ என்ற பதிவிற்கான இணைப்பை, காப்பக இணைப்பு இங்கே பார்க்கவும்.

உண்மை சரிபார்ப்பு

வைரல் பதிவின் உண்மையை அறிய, முதலில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் COVID-19 தொடர்பான தகவல்கள் தேடப்பட்டது. 2025ம் ஆண்டில் கொரோனாவின் 4வது அலை பற்றிய எந்த அறிக்கையையும் கிடைக்கவில்லை. இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவில் தற்போது 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 இல் கொரோனா குறித்து இணையதளத்தில் எந்த அறிக்கையும் இல்லை.

இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் கூகுளில் தேடியபோது, 2025 இல் கொரோனா மீண்டும் வருவதை பற்றிய எந்த ஊடக அறிக்கையும் கிடைக்கவில்லை.

வைரலான கிளிப்பின் உண்மையை அறிய தொகுப்பாளர் சையத் சுஹைலிடம் பேசியபோது அவர், "2022ல் வந்த அறிக்கையின் அடிப்படையில் கொரோனா பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டன. சமீபத்தில் அப்படி எந்த அறிக்கையும் வரவில்லை" என தெரிவித்தார். விசாரணையில் வைரல் அறிக்கை 2022ம் ஆண்டிலிருந்து வந்ததாகும், இது நிகழ்காலம் என்று பயனர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். யூடியூப்பில் கடந்த 6 மாதங்களாக சையத் சுஹைலின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தேடியும், வைரலான கிளிப் எங்கும் கிடைக்கவில்லை.

2025-ம் ஆண்டு கொரோனாவின் நிலை குறித்து, டெல்லி அம்பேத்கர் பயோமெடிக்கல் ரிசர்ச் சென்டரின் (ஏசிபிஆர்) இயக்குநர் பேராசிரியர் சுனீத் குமார் சிங், “2025ல் நான்காவது அலை கொரோனா பற்றி எச்சரிக்கை இல்லை. எனவே, பீதி அடைய தேவையில்லை. 2024-ம் ஆண்டைப் போலவே, 2025-ம் ஆண்டிலும் நிலைமை சாதாரணமாக இருக்கும்” என தெரிவித்தார்.

முடிவு:

விசாரணையில், ரிபப்ளிக் பாரத்-ன் 2022 கிளிப்பைப் பயனர்கள் தற்போது வந்ததாக தவறான கூற்றுடன் பகிர்கிறார்கள் என்பது தெளிவாகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, 2025 இல் கொரோனா குறித்து எந்த எச்சரிக்கையும் இல்லை.

Note : This story was originally published by ‘PTI and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
chinaCoronacovidFact CheckHMPVNews7Tamilnews7TamilUpdatespandemicShakti Collective 2024Team Shakti
Advertisement
Next Article