‘லவ் ஜிஹாத் மற்றும் கடத்தலில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Newsmeter
ஒரு வீட்டில் இருந்து மூன்று சிறுமிகளை ஒருவன் காப்பாற்றும் வீடியோ, லவ் ஜிஹாத் சம்பவத்தை காட்டுவதாக கூறி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
ஒரு வீட்டில் இருந்து மூன்று பெண்களை ஆண் ஒருவர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது லவ் ஜிஹாத் வழக்கு என்றும், இங்கு காணப்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டதாகவும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ள அவர், “ஜாக்கிரதையாக இருங்கள், அப்பாவி இந்து பெண்கள் கடத்தப்பட்டு லவ் ஜிஹாத் மூலம் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை கொன்று உடல் உறுப்புகளை விற்று ரூ.70 முதல் 90 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார். (காப்பகம்)
இதே போன்ற உரிமைகோரல்களை இங்கே, இங்கே காணலாம். (காப்பகம் 1) (காப்பகம் 2)
உண்மை சரிபார்ப்பு:
நியூஸ்மீட்டர் இந்த கூற்றுகள் தவறானவை என்று கண்டறிந்தது. இந்த வீடியோ ஒரு கற்பனையான குறும்படம்.
7:13 நிமிட வைரல் வீடியோவின் தொடக்கத்தில், "இந்த வீடியோவில் உள்ள உள்ளடக்கம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே கருதப்பட வேண்டும்" என்று ஒரு மறுப்பு தோன்றுகிறது. இந்த வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட கற்பனையான ஸ்கிட் மற்றும் உண்மையான சம்பவத்தை சித்தரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
வைரலான வீடியோ கீ பிரேம் தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்ட போது, பிப்ரவரி 12, 2023 அன்று YouTube இல் பதிவேற்றப்பட்ட வீடியோ கிடைத்தது. இந்த வீடியோவை YouTube சேனலான நவீன் ஜங்ரா பதிவேற்றியுள்ளார். வீடியோவின் தலைப்பு, “பெண்கள் எப்படி கடத்தப்படுகிறார்கள், அடுத்து என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள் || நவீன் ஜங்ரா புதிய வீடியோ” என பதிவிடப்பட்டிருந்தது.
வைரலான வீடியோவில் உள்ளவர்கள் இந்த யூடியூப் சேனலில் உள்ள மற்ற வீடியோக்களிலும் தோன்றுவார்கள். அதாவது அவர்கள் நடிகர்கள். யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட மற்ற வீடியோக்களில் உள்ள நடிகர்களுடன் வைரல் வீடியோவில் உள்ள நடிகர்களை ஒப்பிடுவதை கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம்.
வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதால், அந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் தீர்மானித்தது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.