Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
‘மகா கும்பமேளாவில் தண்ணீரில் எரிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் வெளியே வருகின்றன’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளாவில் தண்ணீரில் எரிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் வெளியே வருகின்றன’ என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
10:53 AM Feb 14, 2025 IST | Web Editor
Advertisement
This News Fact Checked by ‘Vishvas News’
Advertisement
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின. இது தொடர்பாக ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், கடல் அலைகளுடன் கரைக்கு மிதக்கும் குப்பைகளைக் காணலாம்.
இந்த வைரல் பதிவை குறித்த உண்மை சரிபார்ப்பில், இந்தக் கூற்று தவறானது என நிரூபிக்கப்பட்டது. விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட காணொளியை மகா கும்பமேளாவுடன் இணைத்து குழப்பத்தை பரப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வைரல் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள காணொளிக்கும் மகா கும்பமேளாவின் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வைரல் பதிவு:
பிப்ரவரி 4 அன்று, "மகா கும்பமேளாவின் போது தண்ணீரில் எரிக்கப்பட்ட பொருட்கள் எப்படி வெளியே வருகின்றன என்பதைப் பாருங்கள். மஹா கும்பமேளா 2025" என்று mashaallah6124 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வைரல் பதிவின் உள்ளடக்கம் இங்கே அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. பல பயனர்கள் அதை உண்மை என்று கருதி வைரலாக்கி வருகின்றனர். பதிவின் காப்பக பதிப்பை இங்கே காண்க.
உண்மை சரிபார்ப்பு:
முதலில் வைரலான காணொளியை கவனமாகப் பார்த்த போது, அந்த காணொளி கடலைப் பற்றியது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில், கடலில் இருந்து குப்பைகள் பாய்ந்து கரைக்கு வருவதைக் காணலாம்.
வீடியோவை ஸ்கேன் செய்த பிறகு, அதிலிருந்து பல முக்கிய பிரேம்களைப் பிரித்தெடுத்து, பின் கூகுள் லென்ஸ் மூலம் அவை தேடப்பட்டன. இந்த வீடியோவை sai_gonxanh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிடைத்தது. இது ஒரு வீடியோவில் பயன்படுத்தப்பட்டது.
மேலும் விசாரணையையில், மீண்டும் ஒருமுறை தேடியபோது, 4ocean என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசல் காணொளி கிடைத்தது. இது ஜனவரி 19 அன்று பதிவேற்றப்பட்டது, அதில் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் பற்றி பேசப்பட்டது.
விசாரணையின் முடிவில், பிரயாக்ராஜில் உள்ள டைனிக் ஜாக்ரனின் தலையங்கப் பொறுப்பாளர் ராகேஷ் பாண்டேவை தொடர்பு கொண்ட போது, வைரலான பதிவில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது என்று அவர் கூறினார். இந்த காணொளிக்கு மகா கும்பமேளாவுடன் எந்த தொடர்பும் இல்லை.
முடிவு:
கடல் பற்றிய விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு காணொளி மகா கும்ப மேளாவுடன் இணைக்கப்பட்டு பொய்கள் பரப்பப்படுவதாக விசாரணையில் தெரியவந்தது.