Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘காவலரை தாக்கிய மன்சூர் முகமது எம்எல்ஏ!’ என வைரலாகும் பதிவு உண்மையா?

காவலர் ஒருவரை எம்எல்ஏ மன்சூர் முகமது தாக்குவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
07:57 AM Jan 19, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newsmeter

Advertisement

காவலர் ஒருவரை எம்எல்ஏ மன்சூர் முகமது தாக்குவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

“எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்... இந்த வீடியோவை இந்தியா முழுவதும் காணும் வகையில் பகிரவும்” என்று ஒரு நபர் காவலரை சரமாரியாக தாக்கும் காணொலியை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் (Archive) பரப்பி வருகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு:

நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலியில் காவலரை தாக்குபவர் பாஜக கவுன்சிலர் என்றும் தெரியவந்தது.

இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி Hindustan Times இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள கன்கர் கெரா என்ற பகுதியில் இயங்கி வரும் பாஜக கவுன்சிலருக்கு சொந்தமான உணவகத்தில் நடைபெற்ற சம்பவம் இது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “காவல்துறை துணை ஆய்வாளர் சுக்பால் சிங் மற்றும் பெண் ஒருவரை அந்த உணவகத்தின் உரிமையாளரான பாஜக கவுன்சிலர் மனிஷ் பன்வார் மற்றும் உணவக பணியாட்கள் இணைத்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்பெண் மற்றும் துணை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் கன்கர் கெரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Times of India 2018ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியின்படி, “இச்சம்பவத்தில் தொடர்புடைய பாஜக கவுன்சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்றும் துணை காவல் ஆய்வாளர் சுக்பால் சிங் மற்றும் அவருடன் சம்பவத்தன்று இருந்த பெண் வழக்கறிஞர் தீப்தி சவுத்ரி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக, இச்சம்பவத்தில் தொடர்புடைய கவுன்சிலர் மனிஷ் பன்வார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி 2021ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.

முடிவாக, நம் தேடலில் எம்எல்ஏ மன்சூர் முகமது காவலரை தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அதில் இருப்பவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக கவுன்சிலரான மனிஷ் பன்வார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckMLANews7Tamilnews7TamilUpdatesPoliceShakti Collective 2024Team ShaktiUttarpradesh
Advertisement
Next Article