For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு - உண்மை என்ன?

தாக்குலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சைஃப் அலி கானின் முதல் படம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது.
09:01 PM Jan 21, 2025 IST | Web Editor
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலி கானின் படம் என வைரலாகும் பதிவு   உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘AajTak

Advertisement

சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் சைஃப் அலிகானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மும்பை லீலாவதி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 15 அன்று இரவு ஒரு நபர் சைஃப் வீட்டிற்குள் நுழைந்து அவரை கத்தியால் தாக்கினார். இதற்கிடையில், ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அப்பதிவில் மருத்துவமனையில் இருந்து சைஃப் அலி கானின் முதல் படம் என்று கூறப்படுகிறது. புகைப்படத்தில், சைஃப் அலிகான் மருத்துவமனை படுக்கையில் உள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின்படி சைஃப் அலி கான் ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவுடன் வீடியோ காலில் பேசினார்.  தாக்குதலுக்குப் பிறகு அவரை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  வைரலான படம் உண்மையில் சைஃப் மற்றும் பஜன் சிங் ராணாவின் வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட் என்று கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தை பாரத் சமாச்சார் என்ற ஊடக அமைப்பும் அதே கூற்றுடன் X தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவின் தலைப்பு “மருத்துவமனையில் இருந்து நடிகர் சைஃப் அலிகானின் முதல் படம் இதுவாகும். அவரது உயிரைக் காப்பாற்றிய டிரைவருடன் வீடியோ காலில் சைஃப் அலி கான்  பேசினார். ஜனவரி 16 ஆம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தாக்கப்பட்ட பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணா அவரது உயிரைக் காப்பாற்றினார். ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு, முதுகுத்தண்டு அருகே பலத்த காயம் அடைந்த சைஃப் தனது மகன் தைமூர் மற்றும் வீட்டு வேலையாட்கள் ஹரியுடன் லீலாவதி மருத்துவமனைக்கு வந்தார். வீட்டு உதவியாளரிடம் உதவி கேட்டபோது ராணா எந்த தயக்கமும் இல்லாமல் காயமடைந்த சைஃபை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ச்சியான இரத்தப்போக்கு இருந்த போதிலும். சைஃப் அமைதியாக இருந்தார் மற்றும் ராணாவை மருத்துவமனைக்குச் செல்வதற்கான தூரத்தைக் கேட்டார். ராணா சைஃப்பிடம் வாடகை கூட வாங்கவில்லை.” என பகிரப்பட்டுள்ளது.

மேலும் பலர் இந்தப் படத்தை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து. இது சைஃப் அலிகானின் முதல் புகைப்படம் என்று கூறியுள்ளனர். ஆஜ்தக் உண்மைச் சோதனையில் இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு :

வைரலான பதிவுகள் தொடர்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் படத்தைத் தேடிய பிறகு, YouTube வீடியோவில் அதன் புகைப்படத்தைக் கண்டோம். இதில் சயீஃப் முகம் முழுமையாக தெரிகிறது. இந்தப் படத்தை ரிவர்ஸ் இமேஜில்  தேடுவதன் மூலம், அசல் படத்தையும் கண்டுபிடித்தோம். ஒரு பயனர் இதை சமூக ஊடக தளமான Pinterest இல் பகிர்ந்துள்ளார். இதில், சைஃப் அல்ல, வேறு யாரோ ஒருவர் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பார். இந்த Pinterest இடுகை எப்போது பகிரப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்தப் படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே கருத்துகள் கூறப்பட்டதைக் காணலாம். இதுவும் இந்தப் படம் பழையது என்பதை நிரூபிக்கிறது.

படத்தில் காணும் உண்மையான மனிதர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இரண்டு போட்டோக்களையும் இணைத்து பார்த்தால் வைரல் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அந்த நபரின் முகத்துடன் சைஃப்பின் முகம் தனித்தனியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை மருத்துவமனையில் சைஃப்பின் படம் காட்டப்பட்ட எந்த ஒரு உண்மையான செய்தியையும் காணமுடியவில்லை. உண்மையாகவே அவரது புகைப்படம் ஏதேனும் வந்திருந்தால், அது செய்தி அறிக்கைகளுடன் சமூக வலைதளங்களில் வந்திருக்கும். சிலதினங்களுக்கு முன்பு  AI ஆல் உருவாக்கப்பட்ட மருத்துவமனையில் சைஃப் மற்றும் கரீனாவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதை நடிகர் சத்ருகன் சின்ஹாவும் பகிர்ந்துள்ளார். இதேபோலத்தான் இப்படமும் எடிட்டிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

முடிவு :

தாக்குலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சைஃப் அலி கானின் முதல் படம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. ஆஜ்தக் நடத்திய உண்மை சரிபார்ப்பில் அப்படம் எடிட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

Note : This story was originally published by ‘AajTak and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement