Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘பிரதமர் மோடி மற்றும் குவைத் ராணியின் சந்திப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?

09:02 AM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by Factly

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குவைத் ராணி இருவரும் சந்தித்ததாக இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெண்ணுடன் பேசுவது போன்ற ஒரு பதிவு சமூக ஊடகங்களில் (இங்கேஇங்கே, இங்கே) வைரலாகி வருகிறது. ஹிஜாப் அணியாமல் சாதாரண உடையில் இருக்கும் அப்பெண் குவைத்தின் ராணி என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 2024 டிசம்பரில் பிரதமர் மோடியின் குவைத் பயணத்தின் பின்னணியில் இந்தப் பதிவு பகிரப்பட்டது.

காப்பகப்படுத்தப்பட்ட பதிவை இங்கே காணலாம்.

வைரலான புகைப்படத்தின் கூகுள் லென்ஸ் தேடல், அதே புகைப்படத்தைக் கொண்ட பல அறிக்கைகளுக்கு (இங்கேஇங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே) அழைத்துச் சென்றது. இந்த அறிக்கைகள் அவர் ஒரு தீவிர யோகா பயிற்சியாளர் மற்றும் குவைத்தின் முதல் உரிமம் பெற்ற யோகா ஸ்டுடியோவான 'தரத்மா'வின் நிறுவனர் ஷைக்கா ஏஜே அல்-சபா என்று அடையாளம் காட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வளைகுடா நாட்டைச் சேர்ந்த பிற செல்வாக்குமிக்கவர்களுடன் 22 டிசம்பர் 2024 அன்று அவரைச் சந்தித்தார்.

22 டிசம்பர் 2024 தேதியிட்ட பிரதமர் மோடியின் ட்விட்டர் (எக்ஸ்) பதிவு (காப்பகம்) ஒன்றும் கிடைத்தது. அதில் அவர் ஷைக்கா ஏஜே அல்-சபாவை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஷைகா ஏ.ஜே. அல்-சபாவை யோகா பயிற்சியாளர் என்றும் குவைத்தின் முதல் உரிமம் பெற்ற யோகா ஸ்டுடியோவான 'தரத்மா'வின் நிறுவனர் என்றும் அவர் பிரதமர் மோடி சந்தித்த அதே புகைப்படத்துடன் வெளி விவகார அமைச்சகத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு (காப்பகம்) மூலம் தெரியவந்தது.

எவ்வாறாயினும், குவைத் "ராணி" என்ற அதிகாரப்பூர்வ பட்டம் அல்லது பதவியைக் கொண்டிருப்பதை குறிப்பிடும் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குவைத் தற்போது ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவால் நிர்வகிக்கப்படுகிறது.

சுருக்கமாக, குவைத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படம் குவைத் ராணியின் புகைப்படம் என தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

Note : This story was originally published by Factly and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckKuwaitNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaShaikha Aj AI SabahShakti Collective 2024Team Shakti
Advertisement
Next Article