இருப்பினும், இதுகுறித்த விசாரணையில், பரப்பப்படும் காணொளி மகாகும்பமேளாவுடையது அல்ல என கண்டறியப்பட்டது. இந்த காணொளி 2022 முதல் பரவி வருகிறது.
பேஸ்புக் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு
உண்மை சரிபார்ப்பு:
வைரல் வீடியோவின் முக்கிய பிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் உதவியுடன் ஆராய்ந்தபோது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் 2024 இல் பகிரப்பட்ட ஒரு ட்விட்டர் பதிவில் கொடுக்கப்பட்ட விளக்கத்தின்படி, வீடியோவில் முஸ்லிம் இளைஞர்கள் துறவிகள் போல் உடையணிந்திருப்பதைக் காட்டுகிறது. இதே போன்ற பதிவுகள் பலரால் பகிரப்பட்டுள்ளன. இதிலிருந்து, வைரல் வீடியோவுக்கும் ஜனவரி 13, 2025 அன்று பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் விசாரணையில், அதே வீடியோ செப்டம்பர் 18, 2022 அன்று ஒரு ட்விட்டர் பதிவில் பகிரப்பட்டது தெரியவந்தது. இந்த வீடியோவில் ஷாருக் மற்றும் ஃபரூக் ஆகிய இளைஞர்கள் காவி உடை அணிந்து துறவிகள் போல் நடித்து ஏமாற்றுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இடம் குறிப்பிடப்படவில்லை. பதிவை கீழே காணலாம்.
இந்த காணொளி 2022ம் ஆண்டு சில ஆன்லைன் செய்தி நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிரப்பட்டது. துறவிகள் வேடத்தில் பிச்சை எடுத்து மோசடி செய்வதாகக் கூறப்பட்டாலும், இந்த காணொளி எங்கு படமாக்கப்பட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
Video 1: Shahrukh & Farooq, posing as Hindu Sadhus, caught red handed while drinking alcohol. They faked as Sadhus to beg and collect money and then drink alcohol with that money.
Shaming Hindu and Sadhus and our Dharma. pic.twitter.com/fTyItYghGB
— MJ (@MJ_007Club) September 18, 2022
இந்த காணொளி முதலில் செப்டம்பர் 15, 2022 அன்று வைரல் துனியா என்ற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டது. இது ஒரு ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காணொளி என்று பகிரப்பட்டது. இருப்பினும், இதுகுறித்த விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த காணொளி ஹரித்வாரில் இருந்து வந்தது என்று பரப்பப்பட்டபோது, டிசம்பர் 2024-ல் நவபாரத் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
காணொளியில் சம்பவம் நடந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், அது பழையது மற்றும் கும்பமேளாவுடன் தொடர்புடையது அல்ல என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.