For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

08:32 PM Dec 14, 2024 IST | Web Editor
‘ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம்’ என வைரலாகும் பதிவு உண்மையா
Advertisement

This news Fact Checked by Newsmeter

Advertisement

சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், திமுகவிற்கு வாக்களித்தால் இதான் நிலை என்று கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வெள்ள நீருக்கு மத்தியில் சிலர் டிராக்டர் உதவியுடன் தங்களது உடைமைகளை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றது என்று கூறி பரப்பி விடுகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இக்காணொலி 2022ஆம் ஆண்டு பெங்களூரில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Manushree Bhatt என்று எக்ஸ் பயனர் பெங்களூரில் ஏற்பட்ட வெள்ளம் என்று வைராகும் காணொலியை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்த இது குறித்து தேடுகையில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, “பெங்களுருவில் உள்ள உயரடுக்கு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் படகுகளில் செல்லும் கோடீஸ்வரர்கள்” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலியுடன் Times of India செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

https://twitter.com/manushree796/status/1567070684123402242

அதன்படி, பெங்களூரில் உள்ள எப்சிலான் கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பிரிட்டானியா சிஇஓ வருண் பெர்ரி, பிக் பாஸ்கெட் இணை நிறுவனர் அபினய் சவுதாரி உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Money Control ஊடகமும் 2022ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

முடிவு:

நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியின் அவலம் என்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்றும் சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் 2022ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by Newsmeter and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement