இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மகன் என வைரலாகும் புகைப்படம் உண்மையா?
This News Fact Checked by Aajtak
இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பட்ன் ரோஹித் சர்மாவின் இரண்டாவது ஆண் குழந்தை என வைரலாகி வரும் புகைப்படம் குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் மீண்டும் தந்தையானார். இவரது மனைவி ரித்திகாவுக்கு நவம்பர் 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு புகைப்படத்தில், ரோஹித்தும் ரித்திகாவும் ஒரு குழந்தையுடன் காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில், புதிதாகப் பிறந்த குழந்தை மருத்துவமனை படுக்கையில் கிடப்பதைக் காணலாம். ரோஹித்தின் பிறந்த மகனின் படங்கள் இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.
இந்தப் படங்களில் காணப்படும் குழந்தைகளை ரோஹித் சர்மாவின் மகன்கள் எனக் கருதி நூற்றுக்கணக்கானோர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். ஆனால் இந்த இரண்டு படங்களும் ரோஹித் ஷர்மாவின் மகனுடையது அல்ல என்று ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
முதல் புகைப்படம்
இந்தப் புகைப்படத்தை தலைகீழாகத் தேடும்போது, 'Te extraño' என்ற பெயருடைய Facebook பக்கத்தின் பதிவில் இது கிடைத்தது. இன்னும் சில பிறந்த குழந்தைகளின் படங்களும் அந்த பக்கத்தில் உள்ளன. இங்குள்ள தலைப்பு ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இடுகை நவம்பர் 5-ம் தேதி பகிரப்பட்டுள்ளது மற்றும் ரோஹித் சர்மாவின் மகன் நவம்பர் 15-ம் தேதி பிறந்தார்.
எனவே, ரோஹித்தின் பிறந்த மகனின் படமாக இது இருக்க முடியாது என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது. ஏனெனில் இது ஏற்கனவே இணையத்தில் உள்ளது.
இது தவிர, 'Helen Sellar' என்ற பயனர் இந்த புகைப்படத்தை புகைப்பட பகிர்வு தளமான Pinterest இல் பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் கூடிய தலைப்பு 'பேரன்' அதாவது அவரது பேரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது புகைப்படம்
இதனுடன், பயனர் புதிதாகப் பிறந்த குழந்தையுடன் வேறு சில படங்களையும் பகிர்ந்துள்ளார். வைரலான புகைப்படத்தில் காணப்படும் குழந்தை இந்த பயனரின் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதை உறுதிப்படுத்த பயனரை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதில் வந்தால், அது செய்திகளில் புதுப்பிக்கப்படும்.
மூன்றாவது புகைப்படம்
இந்த புகைப்படத்தில் குழந்தை ரோஹித் மடியில் இருப்பது அவரது மகள் அடைரா. ரோஹித்தின் மனைவி ரித்திகா தானே இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் டிசம்பர் 30, 2019 அன்று சமைராவின் முதல் பிறந்தநாளில் பகிர்ந்துள்ளார்.
முடிவு:
இதிலிருந்து இந்த புகைப்படமும் ரோஹித்-ரித்திகாவின் மகன் அல்ல என்பது தெளிவாகிறது. இந்த செய்தியை எழுதும் வரை ரோஹித் அல்லது ரித்திகா தங்களுக்கு பிறந்த மகனின் புகைப்படம் எதையும் பகிரவில்லை.
Note : This story was originally published by ‘Aajtak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.