Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“காலி நாற்காலிகளை பார்த்து பிரதமர் மோடி உரையாற்றினார்” என பகிரப்படும் வீடியோ உண்மையா?

08:30 AM May 25, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newschecker

Advertisement

ஹரியானாவில் பிரதமர் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் வீடியோ ஏப்ரல் 29-ம் தேதி புனேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த மே 18-ம் தேதி ஹரியானா மாநிலம் அம்பலாவில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காலி இருக்கைகளுடன் பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடப்பட்டது.

இத்தேடலில் @Anti_CAA_23 என்ற பயனரின் கணக்கில் கடந்த மே 1-ம் தேதி, “மோடி குப்பை பேச்சை கேட்க மக்கள் தயாராக இல்லை. புனேவில் மோடி கலந்துக்கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டமின்றி கிடந்த காலி சேர்கள்” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதே போல் @ASHOK_TN24 என்ற பயனரின் கணக்கில் கடந்த மே 02-ம் தேதியன்று இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து மோடி கலந்துக்கொண்ட புனே பொதுகூட்டத்தின் முழு வீடியோ மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 29, 2024 அன்று லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருப்பதை கண்டறியப்பட்டது. வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் நீல நிற மேலுடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து மோடி அவ்வீடியோவில் பேசுவதை காண முடிந்தது.

மேலும் இவ்வீடியோவின் 54:20 நேரத்தில் பிரதமர் மோடி பேசும் வார்த்தைகள் வைரலாகும் வீடியோவில் மோடி பேசும் வார்த்தைகளுடன் ஒற்றுப்போவதை காண முடிந்தது. இதன் அடிப்படையில் வைரலாகும் வீடியோ சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது. ஆகவே இவ்வீடியோவுக்கும் ஹரியானா பொதுக்கூட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.

மேலும் மோடி யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில் 59-வது நிமிடத்தில், அதாவது வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டதாக கருதப்படும் நேரத்திற்கு (54:20) பிறகு மோடி பேச்சை அதிக மக்கள் உட்கார்ந்து கேட்பதாக இருப்பதை காண முடிகிறது. இதுதவிர வீடியோவின் 6:52, 21:48, 29:40, 39:37 என பல நேரங்களில் பெரும் கூட்டம் இருப்பதை காண முடிகிறது. இதனடிப்படையில் பார்க்கையில் மோடி கூட்டத்திற்கு கூட்டம் வரவில்லை எனும் வாதம் ஏற்புடையதாக இல்லை.

முடிவு:

ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BJPcampaignLoksabha Elections 2024Narendra modiNews7Tamilnews7TamilUpdatesParliamentary elections 2024PMO India
Advertisement
Next Article