EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?
This news fact checked by Newsmeter
மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது என கண்டறியப்பட்டது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP வாக்குகளை இழந்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீதி கேட்டு, உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ விசாரணை கோரி போன்ற தலைப்புகளுடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து அதன் தலைப்பில், “ஆந்திரப் பிரதேச மக்கள் 2024 தேர்தல் முடிவுகள் தொடர்பாக நியாயம் கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றம் அல்லது ஆளுநரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை அல்லது மறுவாக்கு எண்ணிக்கை கோருகிறோம். 2024-ம் ஆண்டு ஆந்திர தேர்தல் முடிவுகளை சரிபார்க்க விவிபிஏடி சீட்டுகளை எண்ண வேண்டும் என்று நான் உட்பட ஆந்திர மக்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோல, பகிரப்பட்ட 3 பதிவுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. பதிவு 1, பதிவு 2 மற்றும் பதிவு 3
உண்மைச் சரிபார்ப்பு:
இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், இந்த வீடியோ 2019-ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டதாக நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.
வீடியோவில் இருந்து முக்கிய பிரேம்கள் தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. அப்போது, ஏப்ரல் 14, 2019 தேதியிட்ட ஏபிஎன் தெலுங்கு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோ கண்டறியப்பட்டது. அந்த வீடியோவின் தலைப்பில், “VVPAT டிஸ்ப்ளே 7 வினாடிகளுக்கு பதிலாக 3 வினாடிகளுக்கு மட்டுமே காட்டுகிறது என தேர்தல் ஆணையத்திடம்ஹரி பிரசாத் புகார் அளித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விரிவான அறிக்கையில், VVPAT 7 வினாடிகளுக்குப் பதிலாக 3 வினாடிகள் மட்டுமே காட்டப்படுவதாக ஹரி பிரசாத் ஊடகங்களிடம் பேசுவதைக் காணலாம். வீடியோவின் இந்த குறிப்பிட்ட பகுதி சமூக ஊடகங்களில் திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, தி க்விண்ட் செய்தி நிறுவனத்தின் விரிவான அறிக்கை ஒன்று கண்டறியப்பட்டது. ஏப்ரல் 18. 2019 அன்று, “VVPAT கருவியில் ஒரு குறியீட்டு பிரச்னை உள்ளது ஆனால் தேர்தல் ஆணையம் அதனை கேட்க மறுக்கிறது: TDP ஹரி பிரசாத் வெமுரு” என தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டது.
அறிக்கையில், ஹரி பிரசாத், “ஒரு பொதுவான வாக்காளருக்கு இது 3 வினாடிகளா அல்லது 7 வினாடிகளா என்பது புரியாது. அது அவர்களுக்கு நல்லது. ஆனால் ஒரு புரோகிராமருக்கு இது முக்கியமானது." என The Quint க்கு பதிலளித்தார்.
நேஷனல் ஹெரால்டு மற்றும் பிசினஸ் ஸ்டாண்டர்டில் இருந்தும் இதே போன்ற அறிக்கைகள் கண்டறியப்பட்டது.
முடிவு:
வைரலாகும் இந்த வீடியோ 2024 ஆந்திர பிரதேச தேர்தலுடன் தொடர்புடையது அல்ல என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் வைரலாகும் வீடியோ, 2019-ம் ஆண்டிற்கு முந்தையது மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை பற்றியது. சமீபத்திய தேர்தல் முறைகேடுகளை பரிந்துரைக்கும் வகையில் தற்போதைய சூழலில் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.