Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவை உ.பி போலீசார் ஆபாசமாக பேசியதாக பரவும் வீடியோ - சமீபத்தியதுதானா?

உத்திர பிரதேச காவல்துறையினர் அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை ஆபாசமாக திட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது.
03:13 PM Feb 11, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘AajTak’ 

Advertisement

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மறைந்த முலாயம் சிங் யாதவின் சிலை, மகாகும்பமேளா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த சிலையின் படத்தைப் பகிர்ந்த மஹந்த் ராஜுதாஸ் ஒரு ஆபாசமான கருத்தை வெளியிட்டார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலீசார் அவரை கைது செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில் போலீசார் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவை திட்டுவதைக் காணலாம். இந்த காணொளி சமீபத்தியது எனக் கூறி, சமூக ஊடக பயனர்கள் வீடியோ பகிர்ந்து வருகின்றனர் . மேலும் போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர். அதே நேரத்தில், சிலர், வீடியோவிற்கு எதிர்வினையாற்றுகையில், மகா கும்பமேளாவில் முலாயம் சிங் யாதவின் சிலை நிறுவப்படுவது குறித்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒரு பயனர் ட்விட்டரில் இவ்வாறு எழுதினார். "உத்தர பிரதேச காவல்துறை நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மறைந்த  முலாயம் சிங் யாதவை அவதூறாக பேசி திட்டி வருகிறார்.  மேலும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தாயாரையும் அவதூறாக பேசியுள்ளார். இந்த காவல் ஆய்வாளரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காணொளி சமீபத்தியது அல்ல, மாறாக 2019 ஆம் ஆண்டு வெளியானது என்பதை ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. இந்த வழக்கில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

உண்மை சரிபார்ப்பு : 

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ குறித்து முக்கிய சொல்லைத் தேடியபோது ஜன்சட்டாவில் வெளியான செய்தி அறிக்கையில் வைரலான வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டைக் கண்டோம். அந்த செய்திகளில், இந்த சம்பவம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நடந்ததாகப் பதிவாகியுள்ளது. ஆனால்  இந்த கும்பமேளா 2019 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பிப்ரவரி 6, 2019 தேதியிட்ட ஜன்சட்டாவின் அறிக்கையில், முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய காவல்துறையினர் மீது அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அர்த்த கும்பமேளா 2019 ஜனவரி 15 முதல் மார்ச் 4 வரை பிரயாக்ராஜில் நடைபெற்றது. அதே நேரத்தில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. வைரலான காணொளியில் அவதூறாக பேசிய இரண்டு கான்ஸ்டபிள்களும் கும்ப்மேளா வளாகத்தில் உள்ள கங்கா பிரசார் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு போலீஸ்காரர்களும் - சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் மாலிக் மற்றும் கான்ஸ்டபிள் சத்யேந்திர யாதவ் எனவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அப்போதைய டிஜிபி ஒபி சிங் கூறியதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு :

உத்திர பிரதேச காவல்துறையினர் அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை ஆபாசமாக திட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவை போலீசார் திட்டும் வீடியோ  5 வருட பழைய காணொலி என்றும் அவை சமீபத்தியது போன்று பகிரப்படுவது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
கும்பமேளாபோலீஸ் திட்டுபழைய வீடியோakilesh yadavMulayam Singh YadavPoliceviral video
Advertisement
Next Article