For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சம்பாய் சோரன் அரசு தப்புமா? - ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!

06:55 AM Feb 05, 2024 IST | Jeni
சம்பாய் சோரன் அரசு தப்புமா    ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே நில சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, அவ்வழக்கில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்து அதிரடி காட்டியது.

ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்தபோதே, கட்சிக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும்,  பலதரப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டது.  அப்போது ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் அக்கட்சி நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருந்த ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து, சம்பாய் சோரன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி,  ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து, பிப்.2-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக 67 வயதான சம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படியுங்கள் : “தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றனர்..!” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

பின்னர் முதலமைச்சர் சம்பாய் சோரன் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இதற்காக ஜேஎம்எம் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஞ்சி அழைத்து வரப்பட்டனர். எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தை தவிர்க்க ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது ஜார்க்கண்ட் திரும்பியுள்ளனர்.

Tags :
Advertisement