கர்நாடகாவின் ஒரு சாலையில் பாகிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருந்ததாக பரவும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Factly’
கர்நாடகாவின் சிக்கோடியில் ஒரு சாலையில் பாகிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ (இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே) கர்நாடகாவின் சிக்கோடியில் ஒரு சாலையில் தெருவிளக்குக் கம்பங்களில் பாகிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டிருப்பதைக் காட்டுவதாகக் கூறுகிறது.
முதலாவதாக, வைரலான வீடியோவில் உள்ள கொடியை பாகிஸ்தான் கொடியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது பாகிஸ்தான் கொடி இல்லை என்பது தெளிவாகிறது. வீடியோவில் உள்ள கொடியில் பாகிஸ்தான் கொடியில் இருக்கும் வெள்ளை பட்டை காணவில்லை.
மேலும் விசாரணையில், வீடியோவில் உள்ள கொடியானது இஸ்லாமியக் கொடி, பொதுவாக இஸ்லாமிய மத விழாக்களில் காட்டப்படுவது தெரியவந்தது. கடந்த காலங்களில், இதே போன்ற கூற்றுக்கள் சமூக ஊடகங்களில் பரவி, இந்த கொடியை பாகிஸ்தான் கொடி என்று தவறாக அடையாளப்படுத்தியது. உண்மை சரிபார்க்கப்பட்ட பல கட்டுரைகளில் இதுபோன்ற உரிமைகோரல்கள் நீக்கப்பட்டுள்ளன. அதை இங்கே, இங்கே, மற்றும் இங்கே பார்க்கலாம்.
வைரலான வீடியோவை சிக்கோடியின் கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், அந்த வீடியோ சிக்கோடி நகரத்திலிருந்து உருவானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிக்கோடி காவல்துறையிடம் முறையிட்டபோது, பதில் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், விஸ்வாஸ் நியூஸ் முன்னர் சிக்கோடி காவல்துறையை தொடர்பு கொண்டு, மிலாது-உன்-நபி பண்டிகையைக் குறிக்கும் கொடிகள் வைக்கப்பட்டதாகவும் அவை பாகிஸ்தான் கொடிகள் அல்ல என்றும் தெளிவுபடுத்தியது.
சுருக்கமாக, கர்நாடகாவின் சிக்கோடியில் தெருவிளக்குக் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கொடிகள் இஸ்லாமியக் கொடிகள் எனவும், பாகிஸ்தான் கொடிகள் அல்ல எனவும் நிருபிக்கப்பட்டது.
Note : This story was originally published by ‘Factly’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.