நாட்டின் மிகப்பெரிய ரிங் ரோடு ஹைதராபாத்தில் உள்ளதா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’
பல சாலைகள் மற்றும் சந்திப்புகளைக் காட்டும் ஒரு படம், ஹைதராபாத்தின் ரிங் ரோட்டை காட்டுகிறது என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 'நாட்டின் மிகப்பெரிய ரிங் ரோடு' என்று கூறப்படும் அந்த படத்தில் பல நிலை சாலைகள், ஒரு கட்டிடத்தின் வழியாகச் செல்லும் மேம்பாலம், ரவுண்டானாக்கள் மற்றும் உயரமான கட்டிடங்களைச் சுற்றி சந்திப்புகள் உள்ளன.
“இந்தியாவின் ஹைதராபாத்தில் 156 கிமீ நீளமுள்ள ரிங் ரோடு உள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய ரிங் ரோடு" என்ற தலைப்புடன் ஒரு ஃபேஸ்புக் பயனர் படத்தைப் பகிர்ந்துள்ளார். (காப்பகம்)
இதே போன்ற கூற்றுகளை இங்கே, இங்கே காணலாம் (காப்பகம் 1, காப்பகம் 2)
உண்மைச் சரிபார்ப்பு:
இந்தக் கூற்று தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரல் படம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
நேரு வெளிவட்டச் சாலை என்றும் அழைக்கப்படும் ஹைதராபாத் வெளிவட்டச் சாலை (ORR), 158 கிமீ நீளமுள்ள ஒரு விரைவுச் சாலையாகும், இது நாட்டிலேயே மிக நீளமான விரைவுச் சாலை.
இதுகுறித்து முக்கிய வார்த்தை தேடல்களைப் பயன்படுத்தி, ஹைதராபாத் ORR இன் பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்ததில், ஜூன் 17, 2021 அன்று பதிவேற்றப்பட்ட நேரு ORR இன் ட்ரோன் காட்சிகள் YouTube-ல் கண்டறியப்பட்டன. அவை ரவுண்டானாக்களுடன் கூடிய பல நிலை போக்குவரத்து பாதைகளைக் காட்டின.
அதன்மூலம், "பெங்களூரு நெடுஞ்சாலையின் டோல் பூத் ORR வெளி செல்லும் பாதை (வெளியே செல்லும் பாதை 16)" அருகே உள்ள ரவுண்டானா மற்றும் மேம்பாலம் ஆகியவற்றை வீடியோ காட்டுகிறது என்பது கண்டறியப்பட்டது.
https://www.google.com/maps?ll=17.251603,78.379041&z=17&t=h&hl=en&gl=IN&mapclient=embed&q=Nehru+Outer+Ring+Rd+Gandiguda,+Hyderabad,+Telangana+501218
ஹைதராபாத் ORR இன் இந்தப் படங்களும் வீடியோக்களும் வைரல் படத்தில் உள்ள கட்டமைப்புகளை ஒத்திருக்கவில்லை. வைரல் படத்தில் உள்ள மைய ரவுண்டானா ஹைதராபாத் ORR இல் எங்கும் இல்லை.
மேலும், வைரல் படத்தை நெருக்கமாக ஆய்வு செய்தபோது, AI-உருவாக்கிய படங்களில் பொதுவான பல காட்சி முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. சாலைகள் மற்றும் சந்திப்புகள் திடீரென முட்டுச்சந்துகளாக உள்ளன. போக்குவரத்தின் திசையில் அசாதாரண அளவிலான வாகனங்கள் மற்றும் முரண்பாடுகள் உள்ளன.
AI கண்டறிதல் கருவியான ஹைவ் மாடரேஷனைப் பயன்படுத்தி, படத்தில் 99.9% AI-உருவாக்கப்பட்ட அல்லது Deep Fake உள்ளடக்கம் இருக்க வாய்ப்புள்ளது என கண்டறிப்பட்டது. மற்றொரு AI கண்டறிதல் கருவியான சைட் எஞ்சின், இந்தப் படம் 99% செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.