For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உங்க ஆதார் அட்டையை யாராவது தவறா பயன்படுத்துறாங்களா? இப்படி கண்டுபிடிங்க!

10:52 AM Mar 07, 2024 IST | Web Editor
உங்க ஆதார் அட்டையை யாராவது தவறா பயன்படுத்துறாங்களா  இப்படி கண்டுபிடிங்க
Advertisement

ஆதார் கார்டுகளை தவறாக வேறுயாராவது பயன்படுத்தை கண்டுபிடிப்பது எப்படி....இப்போது பார்க்கலாம்.... 

Advertisement

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு.  அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது.  இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல.. மக்கள் நலத்திட்டங்களில் உதவிகளை பெறுவதற்குக்கும் ஆதார் கார்டுகள் இன்று அவசியம். சிம் கார்டு,  பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில்,  ரேசன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.

மோசடிகள்:

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை,  இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும்,  மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

ரேசன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே பொருட்களை பெற முடியும் என்றும் தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது சர்ச்சையானது.

ஆதார் கார்டுகள்

மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பது முதல் வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது வரையிலும் ஆதார் கார்டுகள் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சிறு, குறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போதும் இந்த அட்டை தேவைப்படுகிறது.

அந்த அளவுக்கு ஒருவரின் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டுகள், அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே பல இடங்களிலும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மோசடி நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

கவனம் அவசியம்

அதனால்,  ஆதார் கார்டுகள் விஷயத்தில் எப்போதுமே விழிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.  ஒருவேளை உங்கள் ஆதார் கார்டினை யாராவது தவறாக பயன்படுத்தப்படுவதாக இருந்தால்,  அதனை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அந்தவகையில்,  UIDAI என்ற வெப்சைட்டிற்கு சென்று உங்களது ஆதார் அட்டை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்து விடலாம்.

இதோ அந்த வழிமுறைகள்:

- UIDAI என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள், ஆதார் சேவைகளுக்குச் (Aadhaar Services) என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.

- ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து,  உங்களது ஆதார் நம்பரை பதிவிட வேண்டும்.

- இப்போது, "OTP -ஐ உருவாக்கு" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

- ஆதாரில் இருக்கும் மொபைலுக்கு வரும் OTP-ஐ ஆன்லைனில் கேட்கும் இடத்தில் பதிவிட வேண்டும்.

- இப்போது,  ஆதார் எண்ணின் வரலாறு ஸ்கிரீனில் முழுமையாக காண்பிக்கப்படும்.  அதில், உங்களது ஆதாரை,  யாராவது சந்தேகத்துக்குரிய வகையில் பயன்படுத்துவதை கண்டால், UIDAI - வாடிக்கையாளர் சேவை மைய எண் 1947 -ஐ தொடர்பு கொண்டு,  புகார் செய்யலாம். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல,  help@uidai.gov.in என்ற மெயில் முகவரி வழியாகவும் புகார் செய்யலாம்.

Tags :
Advertisement