'STR 49' படத்தில் மம்மூட்டியா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே இயக்குனர் மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைப்’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூன்.5ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள் : மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!
இவர் தற்போது 'STR 49' என்ற படத்தில் நடிக்கிறார். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாகவும், கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இவர் இது தவிர STR 50, STR 51 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.