For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜூன் 5ம் தேதி ராகுல் காந்தி தாய்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளாரா? - வைரலாகும் விமானத்தின் போர்டிங் பாஸ் போலியானது!

10:09 AM Jun 03, 2024 IST | Web Editor
ஜூன் 5ம் தேதி ராகுல் காந்தி தாய்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளாரா     வைரலாகும் விமானத்தின் போர்டிங் பாஸ் போலியானது
Advertisement

This news fact checked by BOOM

Advertisement

வாக்கு எண்ணிக்கை முடிவிற்கு அடுத்த நாளான ஜுன் 5ம் தேதி ராகுல் காந்தி தாய்லாந்து செல்வதற்கு பிஸ்னஸ் கிளாசில் விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி பெயரில் போர்டிங் பாஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் உண்மைத் தன்மை குறித்து BOOM செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம். 

  மக்களவைத் தேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு  ஜூன் 1ம் தேதியோடு முடிந்துள்ள நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வைரலாகும் ராகுல் காந்தியின் போர்டிங் பாஸ் :

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாளை மறுதினம் ராகுல் காந்தி தாய்லாந்து நாட்டிற்கு செல்ல உள்ளார் என சமூக வலைதளங்களில் ராகுல் காந்தியின் பெயர் பொறித்த போர்டிங் பாஸ் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்ட நபர்கள் “ இதுதான் ராகுல் காந்தி தாய்லாந்து பயணம் செய்யும் விஸ்தாரா விமானத்தின் டிக்கெட்” என்று பதிவிட்டுள்ளனர்.

https://x.com/PeterCat71/status/1796573859686351086

மற்றொரு எக்ஸ் தள பயனர் ஒருவர் “வாக்கு எண்ணிக்கை முடிந்து ஜூன் 5ம் தேதி ராகுல் காந்தி தாய்லாந்திற்கு தப்பியோட திட்டம்” என பதிவிட்டுள்ளார்.

உண்மை சரிபார்ப்பு : 

ராகுல் காந்தியின் தாய்லாந்து போர்டிங் பாஸ் தொடர்பாக வைரலாகும் படத்தினை பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி அந்த போர்டிங் பாஸில் இருந்த விமானத்தின் எண் இருக்கும் கட்டத்தில் இரண்டு வெவ்வேறு எண்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.  ஒரே போர்டிங் பாஸில் ஒரு இடத்தில் UK121 எனவும் மற்றொரு இடத்தில் UK115 எனவும் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் வைரல் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அந்த தேடலின் முடிவில்  'Live From A Lounge'  என்கிற இணையதளத்திற்கு அவை அழைத்துச் சென்றது. அந்த கட்டுரையில் ஒரு போர்டிங் பாஸ் இடம்பெற்றுள்ளது. அதன்படி அஜய் அவ்தானிக்கு ஆகஸ்ட் 6, 2019 அன்று டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கான போர்டிங் பாஸ் படம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த கட்டுரையின் ஆசிரியரும்  நிறுவனரும் 'Live From A Lounge'  ஆசிரியருமான அஜய் அவ்தானியை பூம் தொடர்பு கொண்டது.  2019 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்தபோது வழங்கப்பட்ட போர்டிங் பாஸ் தான் அந்தக் கட்டுரையில் உள்ளதாக அவ்தானி  BOOM இடம் உறுதிப்படுத்தினார். மேலும்  " அந்த குறிப்பிட்ட விஸ்தாரா சர்வதேச விமானத்தில் நான்தான் பயணம் செய்தேன். இந்த படத்தை சிலர் எடிட் செய்துள்ளனர். ஆனால் போர்டிங் பாஸில்  இரண்டு இடங்களில் குறிப்பிட்டுள்ள  விமான எண்களில் ஒன்றை மாற்ற மறந்துவிட்டார்” என தெரிவித்தார்.

முடிவு :

வாக்கு எண்ணிக்கை முடிவிற்கு அடுத்த நாளான ஜுன் 5ம் தேதி ராகுல் காந்தி தாய்லாந்து செல்வதற்கு பிஸ்னஸ் கிளாசில் விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் போர்டிங் பாஸ் போலியானது என்றும் அவை எடிட் செய்யப்பட்டது எனவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.

Note : This story was originally published by BOOM and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement