For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிசம்பரில் திருச்செந்தூர் வருகிறாரா #PMModi?- யூடியூப் ஜோதிடர் பேச்சால் சர்ச்சை!

09:24 AM Aug 20, 2024 IST | Web Editor
டிசம்பரில் திருச்செந்தூர் வருகிறாரா  pmmodi   யூடியூப் ஜோதிடர் பேச்சால் சர்ச்சை
Advertisement

டிசம்பர் மாத பௌர்ணமி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருவார் என பிரபல யூடியூப் ஜோதிடர் ஆண்டாள்
சொக்கலிங்கம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் . இவர் பிரபல யூடியூப் ஜோதிடர் ஆவார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய
சுவாமி கோயில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி வழிபட்டால், மன அழுத்தம்
குறைவதுடன், வாழ்க்கையில் மேம்படலாம் என யூடியூப் மூலம் தெரிவித்திருந்தார்.

இதனால் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டுச் சென்றனர். இந்த நிலையில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதுகுறித்து ஆண்டாள் பக்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

"கடந்த 6 வருடங்களாக திருச்செந்தூரை மையப்படுத்தி பக்தர்களிடம் உண்மையான பக்தியை பரப்புவதற்கு பௌர்ணமி தோறும் ஆண்டாள் பக்தர் பேரவை ஒருங்கிணைத்து வருகிறது. கடல் ஆரத்தி என்பது இங்குள்ள பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் அதனை ஊக்கப்படுத்துகிறோம். கடல் அனைவருக்கும் பொதுவானது. இங்கு சாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரை அனைத்து மதத்திற்கும் அனைத்து சாதியினருக்கும் பொதுவானது.

கோயிலின் உள்ளே தான் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும். ஆகம விதிப்படி சட்டை  அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது. ஆனால் இங்கு கோயில் அலுவலர், செக்யூரிட்டி சட்டையுடன் தான் செல்கின்றனர். கடல் மத்திய அரசு சம்மந்தப்பட்டது. வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத பௌர்ணமியில் பிரதமர் நரேந்திர மோடி திருச்செந்தூர் வருவார். அவர் வரும் போது அதற்கான தீர்வு கிடைத்துவிடும் என நம்புகிறேன்."

இவ்வாறு யூடியூப் ஜோதிடர் ஆண்டாள் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

Tags :
Advertisement