For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இசை பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும் - வைரமுத்து பேச்சு!

07:49 AM Apr 28, 2024 IST | Web Editor
இசை பெரிதா  மொழி பெரிதா  இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும்   வைரமுத்து பேச்சு
Advertisement

இசையா பெரிதா? மொழி பெரிதா? இதனைப் புரிந்து கொண்டால்தான் ஞானியாக முடியும்  என வைரமுத்து பேசியுள்ளார்.

Advertisement

நடிகர்கள் பிரஜன்,யாசிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள "படிக்காத பக்கங்கள்"
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.  இவ்விழாவில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் வைரமுத்து பேசியதாவது..

” இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். வளரக்கூடிய கலைஞர்களை
வாழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் வந்துள்ளேன்.  திரையரங்குகளில் 15 பேர் கூட வரவில்லை என்றால் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் யார்.?  ஒரு மோசமாக யுகத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. அந்த யுகம் தொழில்நுட்ப யுகம்.

ரசிகர்களை பல பிரிவுகள் துண்டாக்கிவிட்டன. படங்கள் தோல்வி அடைந்தால் வருத்தப்படுவேன். நான் பாட்டு எழுதும் போது சமூகத்திற்கு ஏதாவது ஒரு நீதி, சீர்திருத்தம் கிட்டாதா என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன். இது எனக்கு திரைத்துறையில் 44வது வருடம்.

இப்படத்தில் நான் எழுதிய சரக்கு பாடல் உங்களுக்கு பிடிக்கும். எனது முன்னோடிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்டோர் தமிழ் பாடலின் வழியாக ஒரு கருத்தை சொல்ல நினைத்தனர் அதுதான் நிற்கிறது. மதுவை கொண்டாடித்தான் தமிழில் பாடல்கள் வந்துள்ளது.

இப்படத்தில் மதுக்கடையில் மதுவுக்கு எதிராக பாடல் வந்துள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க மதுவுக்கு எதிரான பாட்டு. நாட்டில் மதுவால் அதிக விபத்துகள் நடப்பதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் நான் வெறுக்கும் வாசனை ஒன்று என்றால் புகை வாசனை. மதுவை விட மோசமானது புகை.

பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி அதற்கு அழகு செய்தது இசை. நல்ல பொருளாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தங்கம் தங்கம் தான். வைரம் வைரம் தான். நல்ல பொருள் எத்தனை காலம் ஆனாலும் தன் தடைகளை கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடும். கதை நன்றாக இருந்தால் நிச்சயம் அந்த படம் வெற்றி பெறும். சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாகவும், மொழியை விட இசை பெரியதாகவும் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு அதனை புரிந்து கொள்பவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி” என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement