For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GOAT படத்தில் நடிக்கிறாரா மோகன்லால் ?… வைரலாகும் புகைப்படம்…

06:56 PM Aug 30, 2024 IST | Web Editor
 goat படத்தில் நடிக்கிறாரா மோகன்லால்  … வைரலாகும் புகைப்படம்…
Advertisement

கோட் திரைப்படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

அடுத்த வாரம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் விஜய்யின் 'கோட்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் சந்தித்து எடுத்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. '

நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், 'கோட்' படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை என்பது உறுதி. மோகன்லால் நடித்துள்ள 'பரோஸ்' திரைப்படம் அக்டோபர் 3-ம் தேதி வெளியாகவிருப்பதால், அதன் இறுதிக்கட்ட பணிகளுக்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். அப்போது, வெங்கட் பிரபுவுடன் மோகன்லால் சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த சந்திப்பு எதிர்காலத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வெங்கட் பிரபு - மோகன்லால் கூட்டணியில் ஒரு படம் உருவானால், அது நிச்சயம் திரையுலகில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தும். அப்படியொரு படம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
Advertisement