Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தியேட்டர் வளாகத்துக்குள் முதல் நாள் முதல் ஷோ பேட்டி எடுக்க தடை? - வெளியான பரபரப்பு அறிக்கை!

10:30 AM Nov 20, 2024 IST | Web Editor
Advertisement

திரையரங்குகளில் யூடியூபர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.

Tags :
fdfsTFAATheatre
Advertisement
Next Article