For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா?”.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
09:09 PM Feb 08, 2025 IST | Web Editor
நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா ”     முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி
Advertisement

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று ஆவடியில் நடந்த கண்டன கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Advertisement

கூட்டத்தில் அவர் பேசியதாவது;

“பெரியர் மண்ணில் நாம் பெரும் வெற்றி பெற்று விட்டோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-வை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழ்நாட்டை வஞ்சிக்கிற மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டத்தை நடத்தி வருகிறோம். நடத்துகிறோம் என்று சொல்வதைவிட கண்டன கூட்டம் நடத்த தள்ளப்பட்டுள்ளோம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வேதனையோடு இக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க ஒன்று கூடியிருக்கிறோம். 2019 சட்டமன்ற தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி பொறுப்பை வழங்கினார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றி வருகிறேன். இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டத்தை நிறைவேற்றி, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்த்து வருகிறோம். மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் வருமை இல்லா மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கும் அதிகமான தனியார் முதலீடு திட்டங்கள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நன்மையளிக்கம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எல்லா துறைகளிலும் மேல்நோக்கிய வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருகிறது. மத்திய அரசு மட்டும் தமிழ்நாட்டிற்கு ஒத்துழைப்பு அளித்திருந்தால், தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ந்திருக்க முடியும். தமிழ்நாடு மக்கள் இந்தியா கூட்டணிக்கு கொடுத்த வெற்றியைப்போல் சில மாநிலங்களில் பெற முடியாத காரணத்தினால் பாஜக ஆட்சி அமைத்துவிட்டது.

அப்படியிருந்தும் அவர்களால் மைனாரிட்டி ஆட்சிதான் அமைக்க முடிந்தது. இருப்பினும் பாசிச மற்றும் சர்வாதிகார போக்கில் இருந்து இறங்காமல் உள்ளது. மதவாத அரசியல் நடத்தி மக்களை மயக்கி அரசியல் லாபம் அடைய பார்க்கிறார்கள். மாநிலங்களுக்கு திட்டங்களை தந்து வளர்ச்சியடைய வைக்க வேண்டும் என்ற நினைப்பு பாஜகவுக்கு வராது.

மதவாத அரசியல் செய்து ஓட்டு அறுவடை செய்து வருகிறார்கள். அதனால்தான் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கையாக உள்ளது. மத்திய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவுக்கே ஒன்றுமில்லாமல் இருக்கிறது.

மாநில அரசுக்கு நிதி தராத மத்திய அரசு கடன் தருகிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்ல வட்டி கடையா? மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆட்சி செய்யும் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் கடன் தருகிறோம் என்று சொல்வது கூட்டாட்சியா? சட்டபடி ஆட்சி செய்கிறீர்களா இல்லை இஷ்டப்படி ஆட்சி செய்கிறீர்களா? தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா?.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கிறது. அதனால், நிதி நிலை அறிக்கையில் பீகார், பீகார் என்று மத்திய பாஜக அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பீகாருக்கோ, ஆந்திராவுக்கோ திட்டங்களை ஒதுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தமிழ்நாடு பாஜக-வுக்கு பிடிக்கவில்லையாம். பாஜகவுக்கு வாக்களிக்காத மக்கள் என நிதி கொடுக்க மறுக்கிறார்கள். நிதி கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் நீதியை வாங்காமல் இருக்க மாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவர்களாக இருக்கலாம். நாங்கள் வாழவைப்பவர்கள்.

மாநில அரசு தரும் அறிக்கையை படிப்பதுதான் ஆளுநரின் ஒரே வேலை. அதைக்கூட செய்யாமல் அவர் மறுக்கிறார். குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் ஆளுநர்கள் உரையை வாசித்ததாக அவையில் குறிப்பிடுகிறார். மாநில அரசுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் உண்மையை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்.

ஏற்கனவே ஆளுநரின் அட்டூழியங்களைப் பற்றி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி வருகிறது. அவர் திமுக ஆட்சியில் இருக்கும் வரை பதவியில் இருக்க வேண்டும் அப்போதுதான் நமக்கு வசதியாக இருக்கும். அவரே நமக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் இருந்தால் போதும் நாம் ஆட்சிக்கு பிரச்சாரம் செய்ய தேவையில்லை அவர்களே பிரச்சாரம் செய்து மீண்டும் மீண்டும் திமுக-வை ஆட்சியில் அமர்த்துவார்கள்.

யாராக இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் நாம் செய்துவரும் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதனால்தான் கலவரம் மற்றும் வன்முறை செய்யப் பார்க்கிறார்கள். பல்வேறு மதங்கள், சாதிகள் கொண்ட மக்கள் இருந்தாலும் தமிழர்கள் என்ற உணர்வோடு மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அவரவர் கடவுள், அவரவர் நம்பிக்கை, அவரவர் விருப்பம் என வாழ்ந்து வருகிறார்கள். இங்கு எல்லா சமய விழாவும் நடந்து அமைதியாக மக்கள் வீட்டுக்கு போகிறார்கள். ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு என்று பகுத்தறிந்து மக்கள் வாழும் மாநிலம் நமது தமிழ்நாடு.

ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் தீய சக்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிற மதத்தின் உணர்வுகளை மதிப்பவர்களைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் பாஜக ஆளும் மாநிலங்கள்போல் வன்முறை இல்லாமல் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த அமைதியை சில சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சீர்குலைக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நியாயமாக வரவேண்டிய நிதியை தரமாட்டார்கள். பேரிடர் நேரத்தில் உதவமாட்டார்கள். ஆனால் மாநில அமைதியை கெடுக்க நினைப்பீர்களா? நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். திருந்துங்க இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement