Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'விக்ரம் 63' படத்தின் இயக்குநர் இவரா?

02:56 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

விக்ரம் 63 படத்தை சாந்தகுமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில்  விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.  நடிகர் விக்ரமின் 62வது திரைப்படம் 'வீர தீர சூரன்'.  இந்த படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விக்ரம் 63 படத்தை இயக்குநர் சாந்த குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குநர் சாந் குமார், விக்ரமிடம் கதை சொன்னதாகவும், அந்த கதை விக்ரமுக்கு பிடித்ததாகவும் கூறப்படுகிறது. மௌனகுரு, மகாமுனி படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சாந்தகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ரசவாதி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Tags :
Chiyaan Vikrammovie updatePa. RanjithSantha KumarthangalanvikramVikram 63
Advertisement
Next Article