For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

GOAT ஹாலிவுட் காப்பியா..? - வெங்கட் பிரபு கொடுத்த பதிலடி!...

08:51 PM Jan 01, 2024 IST | Web Editor
goat ஹாலிவுட் காப்பியா       வெங்கட் பிரபு கொடுத்த பதிலடி
Advertisement

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Advertisement

லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்னேகா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது. இப்படத்திற்கான ஷூட்டிங்  பேங்காக்கில் நடைபெற்று வந்தது.

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்குவதாக கூறப்பட்டு வந்தது. ஜனவரி முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஹாலிவுட் ஹீரோவான ஸ்மித் நடித்த ‘ஜெமினி மேன்’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா , மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின  இந்நிலையில் Greatest Of All Time திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (31.12.2024) வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கிடையில்,  இந்த படம் ஹாலிவுட்டில் வில்ஸ் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் காப்பியென்று கூறிவருகின்றனர். இந்த நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெங்கட்பிரபுவை டேக் செய்து சில கருத்துகள் கூறியுள்ளார்.
அதில், ''2023  ஆம் ஆண்டு  நடிகர் விஜய் வாரிசு, லியோ பட தோல்வியால் துவண்டுள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டி வெற்றியை எதிர்பார்த்துள்ளார். ஹாலிவுட் படத்தை விஜய்க்காக இயக்க திட்டமிட்டிருந்தால், அதற்கு விஜய் பொருத்தமானவர் இல்லை என நினைக்கி -றேன்.  தெலுங்கு ரீ  மேக் படங்கள் தான் அவருக்கு   நன்றாக் இருக்கும்'' என்று தன் கருத்தை கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெங்கட்பிரபு, ''சகோதரரே மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். அன்பைப் பகிரலாம்.... புத்தாண்டு வாழ்த்துகள் ''என்று தெரிவித்துள்ளார்.

Greatest Of All Time திரைப்படத்தின் செகண்ட் லுக் (இரண்டாம் பார்வை) போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு அவரது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி படக்குழு இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement