Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"3-வது திருமணமா?" #AamirKhan கூறியது என்ன?

04:12 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

3-வது திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் அமீர்கான் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பிரபல பாலவுட் நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் லகான், ஃபனா, தாரே ஜமீன் பர், கஜினி, 3 இடியட்ஸ், தலாஷ், தூம் 3, தங்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமீர் கான் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன்ஸை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ஜெனிலியா தேஷ்முக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அமீர் கான், ரீனா தத்தா என்பவரை கடந்த 1986 ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் 2002-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு 2005ல் கிரண் ராவ் என்பவரை அமீர் கான் திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் 2021ல் பிரிந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கிரண் ராவ் திரைப்பட இயக்குநர் ஆவார்.

இந்த சூழலில் அமீர்கான் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது, அமீர் கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமீர் கான், ​​“எனக்கு இப்போது 59 வயதாகிறது, நான் எங்கே மீண்டும் திருமணம் செய்துகொள்ள போகிறேன்? எனது வாழ்க்கையில் இப்போது எனக்கு பல உறவுகள் உள்ளன. எனது குடும்பம், எனது குழந்தைகளுடன் நான் மீண்டும் இணைந்துள்ளேன். எனக்கு நெருக்கமானவர்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க உழைத்து வருகிறேன்" என்றார்.

Tags :
Actor Amir KhanAmir KhanMarriage
Advertisement
Next Article