For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இறுகப்பற்று திரைப்படம் - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

07:27 AM Nov 01, 2023 IST | Web Editor
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இறுகப்பற்று திரைப்படம்   ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
Advertisement

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இறுகப்பற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் உருவான எலி, தெனாலி ராமன்  ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் சமீபத்தில் இறுகப்பற்று எனும் படத்தை இயக்கினார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து மக்களிடையே சைலண்டாக நல்ல வரவேறபை பெற்றது.

இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த் மற்றும் அபர்ணதி ஆகியோர் நடித்துள்ளனர்.  காதல், எமோசன்ஸ், விட்டுகொடுப்புத் தன்மை, அனுசரிப்பு, Possesiveness என அனைத்து வகையாக காட்சிகளையும் நம் கண்முன்னே நிறுத்தியுள்ளது இந்த படம். இந்த படத்தில் வரும் சில காட்சிகள் தாம்பத்திய வாழ்க்கையை தாண்டி நண்பர்களுக்கும் ஏற்ற படமாகவே உள்ளது.

3 ஜோடிகளின் காதல் கதையாக இப்படம் நகர்கிறது.  எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, பி. கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இறுகப்பற்று திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement