For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பூமியை நெருங்கும் எரிகற்கள்...பேராபத்து நிகழுமா?” - நாசா அதிர்ச்சி!

03:45 PM May 04, 2024 IST | Web Editor
“பூமியை நெருங்கும் எரிகற்கள்   பேராபத்து நிகழுமா ”   நாசா அதிர்ச்சி
Advertisement

விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாகவும், ஆனால் பூமிக்கு ஆபத்து இல்லை என நாசா விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

சூரிய குடும்பத்தையும், பால்வழி அண்டத்தையும் ஆய்வு செய்ய நாசா பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டு அக்டோபரில் சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய  விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் சைக் 16 கோளில் இருந்து லேசர் சிக்னல் பூமிக்கு கிடைத்தது. இதன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் தகவல்களை நாசாவுக்கு அனுப்பியது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போன்று 1.5 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா  எச்சரித்துள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இவ்விரண்டு எரிகற்களும் வெவ்வேறு கூட்டத்திலிருந்து வருவதாகவும், வெவ்வேறு வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எரிகற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் நாசா விவரித்துள்ளது.

முதல் எரிகல்லுக்கு இந்த ஆண்டின் எண்ணுடன் சேர்த்து எச்கே1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அப்பல்லோ எரிகல் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் சுற்றுவட்டப்பாதை பூமியின் பாதையை அவ்வப்போது குறுக்காக கடந்துசெல்வது வழக்கம். இது கிட்டத்தட்ட 99 அடி (30.14 மீ) நீளம்கொண்டது. தோராயமாக ஒரு வணிக விமானம் அளவுக்கு பெரியதாக இருக்கும். மிகப்பெரிய அளவை கொண்டிருந்தாலும், இது பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

இன்று (மே. 4) இந்த விண்கல் பூமியை மணிக்கு 31,114 கிமீ வேகத்தில் கடக்கவுள்ளது. நல்வாய்ப்பாக இந்த எரிகல்லுக்கும் பூமிக்கும் இடையில் கிட்டத்தட்ட 6,88,896 கிமீ தொலைவு உள்ளது. இது தோராயமாக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியை விட 1.8 மடங்கு அதிகமாகும்.

இரண்டாவது எரிகல்லுக்கு 2024 ஜேஇ என பெயரிடப்பட்டுள்ளது. இது அமோர் எரிகல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அப்போல்லோ குழு எரிகல்லைப் போல அல்லாமல், அமோர்ஸ் எரிகல் எனவும் பூமியின் வட்டப்பாதையிலிருந்து வெளியிலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதன் அளவு 165 அடி (50 மீ) என கணக்கிடப்பட்டுள்ளது. அளவில் மிகப்பெரியதான இந்த எரிகல் மணிக்கு 27,926 கிமீ வேகத்தில் பயணித்து வருகிறது. இதுவும் இன்று (மே 4) பூமியைக் கடக்கிறது. பூமியை விட தொலைவில் கடந்து செல்வதால் ஆபத்து இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாசா தொடர்ந்து எரிகற்களை கண்காணித்து வருகிறது. வழக்கமாக 140 மீட்டரை விட பெரிய எரிகற்கள்தான் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதுவும் பூமியின் வட்டப்பாதைக்குள் வந்தால் மட்டுமே. நல்லவேலையாக, 2024 எச்கே 1 மற்றும் ஜேஇ இரண்டுமே புவி வட்டப்பாதைக்குள் வெளியே செல்கின்றன.

Tags :
Advertisement