#Iraq | அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!
ஈராக்கில் அந்த நாட்டு வீரா்களுடன் இணைந்து அமெரிக்க படையினா் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 15 போ் கொல்லப்பட்டனா்.
மேற்கு ஈராக்கில் உள்ள அன்பார் பாலைவனப் பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ஈராக் ராணுவத்தின் கூட்டுப் படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 அமெரிக்க படையினர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் ஏராளான ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடி பொருட்கள், தற்கொலை பெல்ட்கள் வைத்திருந்ததாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
ஈராக்கில் இருந்து அமெரிக்க படை முழுமையாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டாலும், அதற்கான கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது 2,500 அமெரிக்க படையினர் ஈராக்கில் உள்ள தன்பார் ராணுவ தளத்தில் உள்ளனர். ஈராக்கில் அமெரிக்க படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் இம்முறைதான் அதிக ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.