Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகும் ஈரான்... தீவிரமடையும் மோதல்போக்கு!

08:39 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

எந்த நேரத்திலும் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு, ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டை தாண்டி போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கானோர்  உயிரிழந்ததோடு பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் இந்த மோதலானது மூன்றாம் உலகப்போருக்கும் வழிவகுத்து வருகிறது. காரணம் இஸ்ரேலின் தென்மேற்கில் காசா முனை அமைந்துள்ளது. வடக்குப் பகுதி எல்லையில் லெபனான் அமைந்துள்ளது. காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனால் இஸ்ரேலுக்கும், ஈரானுக்குமான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியது. இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.  தொடர்ந்து லெபனான், ஈரான், இஸ்ரேல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் எந்த நேரத்திலும் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால், பதிலுக்கு ஈரான் ராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி போர் தொடங்கி ஒரு வருடம் ஆனதையடுத்து,  தங்கள் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி, ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஓராண்டு நினைவு நாளன்று இஸ்ரேல் கூறியதாவது:

இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, பல்வேறு முனைகளிலும் எங்களது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையிலும் சட்டத்துக்கு விரோதமாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

Tags :
Ayatollah KhameneiIranIranian MilitaryIsraelwar
Advertisement
Next Article