For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க #Iran திட்டம்!

07:07 PM Oct 26, 2024 IST | Web Editor
இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க  iran திட்டம்
Advertisement

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், தக்க பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இஸ்ரேல் மீது கடந்த 1-ஆம்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இதனிடையே, ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : “டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை சந்திக்க நேரிடும்” – வாக்காளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை!

இந்நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

" இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா. சாசனம் 51-வது பிரிவின்படி, ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது" :

இவ்வாறு ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement