ஐபிஎல் | வெல்லப்போவது யார்? சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த 18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று (மார்ச் 30) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட சறுக்கலில் இருந்து மீள சென்னை அணி தீவிரம் காட்டும்.
இதையும் படியுங்கள் : மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம் – 1,600-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!
அதேநேரத்தில் முதல் 2 ஆட்டங்களில் கண்ட தோவ்லியால் துவண்டு கிடக்கும் ராஜஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதி இருக்கின்றன. இதில் சென்னை 16 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 13 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4ல் ராஜஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி - ஹைதராபாத் மோதல்
முன்னதாக மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் 13-ல் ஹைதராபாத்தும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றன.