துபாயில் தொடங்கியது ஐபிஎல் வீரர்கள் ஏலம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024-ம் ஆண்டிற்கான மினி ஏலம் தொடங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். ஏலத்தில் செலவிட அதிகபட்ச கையிருப்புத் தொகையாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.38 கோடியே 15 லட்சத்தை வைத்துள்ளது. அந்த அணிக்கு இன்னும் 8 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத் தொகை உள்ளது. சென்னை அணியில் 6 இடங்கள் காலியாக உள்ளன.
துல்லியமாக பந்துவீசக்கூடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 8 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு தான் அதிகமான மவுசு இருக்கும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
ஏலப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஷாருக்கான், பிரதோஷ் பால், பாபா இந்திரஜித், அபராஜித், எம்.சித்தார்த் உள்பட 11 பேர் இடம் வகிக்கிறார்கள்.