For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துபாயில் தொடங்கியது ஐபிஎல் வீரர்கள் ஏலம்!

03:28 PM Dec 19, 2023 IST | Web Editor
துபாயில் தொடங்கியது ஐபிஎல் வீரர்கள் ஏலம்
Advertisement

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024-ம் ஆண்டிற்கான மினி ஏலம் தொடங்கியது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். ஏலத்தில் செலவிட அதிகபட்ச கையிருப்புத் தொகையாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.38 கோடியே 15 லட்சத்தை வைத்துள்ளது. அந்த அணிக்கு இன்னும் 8 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத் தொகை உள்ளது. சென்னை அணியில் 6 இடங்கள் காலியாக உள்ளன.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்தின் ஹாரி புரூக், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஜீ, இந்திய பவுலர்கள் ஷர்துல் தாக்குர், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் உள்பட 23 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களை ஏலத்தில் ரூ.2 கோடியில் இருந்து கேட்பார்கள்.

துல்லியமாக பந்துவீசக்கூடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 8 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு தான் அதிகமான மவுசு இருக்கும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஹர்ஷல் பட்டேல், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா, நியூசிலாந்தின் டேரில் மிட்செல், ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், தென்ஆப்பிரிக்காவின் கோட்ஜீ, தப்ரைஸ் ஷம்சி, இங்கிலாந்தின் அடில் ரஷித், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ், கம்மின்ஸ் ஆகியோரும் கணிசமான தொகைக்கு விலை போகலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மூத்த வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்று விட்டார். பென் ஸ்டோக்ஸ் அடுத்த சீசனில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவர்களுக்கு பதிலாக சரியான வீரர்கள் அணிக்கு தேவையாகும். ஷர்துல் தாக்குர், மனிஷ் பாண்டே, ஹேசில்வுட், ரச்சின் ரவீந்திரா, ஜோஷ் இங்லிஸ் உள்ளிட்ட வீரர்களில் ஒரு சிலரை வாங்க சென்னை அணி ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.

ஏலப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஷாருக்கான், பிரதோஷ் பால், பாபா இந்திரஜித், அபராஜித், எம்.சித்தார்த் உள்பட 11 பேர் இடம் வகிக்கிறார்கள்.  

Tags :
Advertisement