ஐபிஎல் 2025: டெல்லியை வீழ்த்தி கடைசி அணியாக ப்ளே ஆஃபில் நுழைந்தது மும்பை!
ப்ளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக நுழைந்தது மும்பை...
06:50 AM May 22, 2025 IST | Web Editor
Advertisement
ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் நேற்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது.
Advertisement
இதனையடுத்து 181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி, மும்பையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றிப் பெற்றது. மேலும் இந்த தோல்வியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்து வெளியேறியது டெல்லி.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை தகுதி பெற்றது. இன்னும் மீதம் ஒரு போட்டியில் மும்பை விளையாட உள்ளது.