ஐபிஎல் | ஹைதராபாத் அணியை துவம்சம் செய்த கொல்கத்தா!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொகல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60 ரன்கள் எடுத்தார். முகமது ஷமி, பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தடுமாறியது.
இறுதியில், ஹைதராபாத் அணி 16.4 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 33 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் வைபப் ஆரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.