ஐபிஎல் 2025 | பஞ்சாப் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொல்கத்தாவில் உள்ள நேற்று (ஏப்.26) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்தனர். இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் பிரியான்ஷ் ஆர்யாவை 69 ரன்களில் அவுட்டாக்கி அதிரடியான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இருப்பினும் ஒருபுறம் பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் அடித்த பிரப்சிம்ரன் சிங் மொத்தமாக 83 ரன்கள் அடித்து வைபவ் அரோராவிடம் ஆட்டமிழந்தார்.
பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியால் பஞ்சாப் அணி 14 ஓவரில்களிலேயே 160 ரன்களை எட்டியது. அதன் பின்பு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 25 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 201 ரன்களை குவித்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
அதன்படி, கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 2 ரன்களுன், சுனில் நரேன் 4 ரன்களம் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறிக்கிட்டது. கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது .