ஐபிஎல் 2025 - பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
ஐபிஎல் 2025 தொடரின் 18வது போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் இருவரும் களம் இறங்கினர்.
இதையடுத்து ஆட்டத்தின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ராஜஸ்தானின் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.