ஐபிஎல் 2025: பஞ்சாப் vs லக்னோ - பந்துவீச்சை தேர்வு செய்த ஸ்ரேயாஸ்!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்து வருகிறது.
லக்னோ அணி இதுவரை விளையாடி உள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிப் பெற்று உள்ளது. பஞ்சாப் விளையாடி உள்ள ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது.
லக்னோ;
மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, திப்வேஷ் ரதி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், ஆவோஷ் கான், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.
பஞ்சாப்;
பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சுர்யன்ஷ் ஷெட்ஜ், மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், சாஹல், பெர்குசன், அர்ஷ்தீப் சிங்.