ஐபிஎல் 2025 : ஹைதராபாத் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று மூன்றாவது வெற்றியை எந்த அணி பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணிகள் களம் காண்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
மும்பை அணி:
ரோகித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ் அல்லது கார்பின் பாஷ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா அல்லது விக்னேஷ் புத்தூர்.
ஹைதராபாத் அணி :
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா அல்லது வியான் முல்டெர்.