ஐபிஎல் 2025: மும்பைக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் மும்பை பேட்டிங் செய்ய உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சொந்த மைதானமான வான்கிடேவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்கிறது. முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை அணி, கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
லக்னோ இதுவரை விளையாடி உள்ள 9 போட்டிகளில் 4-ல் வெற்றிப் பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணி
மார்க்ரம், மார்ஷ், நிக்கோலஸ் பூரன், படோனி, ரிஷப் பந்த், சமத், ரதி, அர்ஷத் கான் , பிஷ்னோய், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்.
மும்பை அணி
ரோகித் சர்மா, ரயான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், தீபக் சஹர், ட்ரெண்ட் போல்ட், கர்ண் விநோத் சர்மா.