ஐபிஎல் 2025 - ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!
ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து. ராஜஸ்தான் அணியில் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தனர். அதேபோல், சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 152 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் 97 ரன்களுடனும், அங்க்ரிஷ் 22 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது.