For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IPL 2025 | #Dhoni விளையாடுவாரா மாட்டாரா? சிஎஸ்கே நிர்வாகம் போடும் அதிரடி மீட்டிங்?

04:20 PM Oct 23, 2024 IST | Web Editor
ipl 2025    dhoni விளையாடுவாரா மாட்டாரா  சிஎஸ்கே நிர்வாகம் போடும் அதிரடி மீட்டிங்
Advertisement

வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் தோனியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஐபிஎல் 2025 தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்னை அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, சிஎஸ்கே அணி அவரை தக்க வைக்குமா என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "தோனி விளையாடவேண்டும் என்று ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ரொம்ப ஆசை இருக்கிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவாரா? என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அவர் தான் இது குறித்து முடிவெடுத்து வைத்திருப்பார். வருகின்ற 31 ம் தேதி என்னவென்று தன்னுடைய முடிவைச் சொல்வதாக எங்களிடம் தெரிவித்து இருக்கிறார்" என தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தோனியை சந்தித்து அணியில் விளையாடுவது தொடர்பாக பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ தோனி இன்னும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாடுவேனா விளையாடமாட்டேனா என்பது பற்றிய முடிவை இன்னும் எடுக்காமல் உள்ளதால் ஒரு வேலை அவர் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவருடைய முடிவு குறித்த விவரம் வரும் 31-ஆம் தேதி தெரிய வரும். அதில், பார்த்து அவர் விளையாடுவாரா அல்லது ஓய்வுபெற முடிவெடுத்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Tags :
Advertisement