For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2025: கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
07:23 PM Apr 29, 2025 IST | Web Editor
ஐபிஎல் 2025  கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
Advertisement

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 48வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Advertisement

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் கொல்கத்தா பேட்டிங் செய்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியையும் தழுவி உள்ளது. பஞ்சாப் உடனான போட்டியின் போது மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டு 1 புள்ளி கொடுக்கப்பட்டது.

அதுபோல 9 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 6 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. இன்று போட்டியில் வெற்றிப் பெற்றால் 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளது.

ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 34 போட்டிகளில் டெல்லி 14 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரத்தில், கொல்கத்தா 18 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.

கொல்கத்தா :

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரோவ்மன் பவல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி.

டெல்லி :

ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார்.

Tags :
Advertisement