ஐபிஎல் 2025 : மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி!
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 38வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இப்போடியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 176 ரன்கள் அடித்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக களம் இறக்கப்பட்ட ஆயுஷ் மாத்ரே சென்னை அணிக்கான தனது முதல் ஆட்டத்திலேயே சிக்ஸ்ர், பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டினார். ரவிந்தீர ஜடேஜா 53 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் அடித்தனர்.
மும்பை தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், மிட்செல், அஷ்வனி, தீபக் சஹர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து மும்பை அணி களமிறங்கவுள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி 6 அல்லது 7வது இடத்திற்கு செல்லும். ஒருவேளை மும்பை அணி வெற்றிப் பெற்றால் 8 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு செல்லும்.