ஐபிஎல் 2025 - மும்பை அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை!
இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18வது சீசன் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி இரண்டாவது போட்டி ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியது.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இந்த ரன்கள் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை பெற்ற அணிகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தை ஹைதராபாத் அணி பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து 3வது போட்டி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.