Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் 2025 | முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த பெங்களூரு… கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
07:08 AM Mar 23, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் நேற்று (மார்ச் 22) தொடங்குகிறது. முதல் நாளான நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி தரப்பில் கேப்டன் ரஹானே 56 ரன்களும், சுனில் நரின் 44 ரன்களும், ரகுவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர்.பெங்களூரு அணியின் க்ருணால் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பெங்களூரு அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். பெங்களூரு அணியின் வீரர்களை வெளியேற்ற முடியாமல் கொல்கத்தா அணி திணறியது. இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும், கேப்டன் பட்டிதார் 34 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் அரோரா, வருண் சுனில் நரின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 (CSK, DC, KKR, PBKS) வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த ஒரே வீரராக விராட் கோலி சாதனை படைத்தார்.

Advertisement
Next Article