ஐபிஎல் 2024 : நடப்பு தொடரில் முதல் சதம் விளாசினார் விராட் கோலி!
ஐபிஎல் 2024 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடப்பு தொடரில் தனது முதல் சதத்தை விராட் கோலி விளாசினார்
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஐபிஎல் 2024ன் 19 வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் உள்ளது.
இதையும் படியுங்கள் : ’ரஜினி 171’ திரைப்படத்தில் இணைகிறாரா ரன்வீர் சிங்? – வெளியான புதிய தகவல்!
இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி க்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் முதலாவதாக விராட் கோலி மற்றும் டூப்ளிசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி நிதானமாகவும் அவ்வபோது அதிரடியாகவும் விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து இருவரின் பார்ட்னர்ஷிப்பும் சிறப்பாக விளையாடி வரும்போது டூப்ளிசிஸ் 44ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் மற்றும் சௌரவ் சாவன் ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். விராட் கோலி அதிரடியாக நின்று விளையாடி அரைசதம் கடந்த நிலையில் 67 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஆட்ட முடிவில் 72 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். இதில் 4சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டிரிக்கல் அடக்கம். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடிக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.