For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IPL 2024 : இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்!

12:07 PM Mar 23, 2024 IST | Web Editor
ipl 2024   இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்
Advertisement

IPL 2024 போட்டியின் இரண்டாவது நாளான இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. 

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று (மார்ச் 22) தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதையும் படியுங்கள் : ஆண்டி ஐயா, அக்கினி வீரபத்திரர், திருவாளி கருப்பு, காளியத்தாள் கோயில் மாசி களரி திருவிழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேற்று (மார்ச் 22) விளையாடின.  ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அசத்தலான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அடுத்து தொடங்கிய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Image

இதையடுத்து, இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்றைய தினத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.  இதன்படி, இன்றைய முதல் போட்டி மதியம் 3.30 மணியளவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 7.30 மணிளவில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Tags :
Advertisement